உடனடியாக துவக்க மக்கள் கோரிக்கை மண்ணச்சநல்லூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 8 மாட்டு வண்டிகள் பறிமுதல்

மண்ணச்சநல்லூர், மார்ச் 4: மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் கொள்ளிட ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 8 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 7 பேர் சிக்கினர். மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு நேரடியாக புகார் சென்றது. இதன் பேரில் எஸ்பி., ராஜன் உத்தரவுப்படி எஸ்ஐ நாகராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று நொச்சியம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கொள்ளிடம் ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளிவந்த 8 மாட்டு வண்டிகளை தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

போலீசாரை கண்டதும் ஒரு மாட்டு வண்டியை ஓட்டிவந்தவர் தப்பியோடிவிட்டார். தொடர்ந்து தனிப்படை போலீசார் மாட்டு வண்டியில் மணல் கடத்திய குமரக்குடி பகுதியை சேர்ந்த கோபிநாத்(35), வேம்படையான்(65), அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ரஜினி(35), நொச்சியம் கீழத்தெரு பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன்(21), ரவி(35), லட்சுமணன்(20), ரஞ்சித்குமார்(28) ஆகிய 7 பேரையும் கைது செய்து மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: