சட்டமன்ற தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கையாக 5 பேர் கை

கேடிசி நகர், மார்ச் 4: சட்டமன்ற தேர்தலையொட்டி அரசுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டி வருபவர்களையும், பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களையும் முன்னெச்சரிக்கையாக கைது செய்ய டிஜிபி உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு உத்தரவின் பேரில், துணை கமிஷனர் சீனிவாசன் மேற்பார்வையில், நெல்லை தச்சநல்லூர் மேக்கரை பகுதியைச் சேர்ந்த குமுளி ராஜ்குமார் மற்றும் கம்மாளங்குளத்தைச் சேர்ந்த அருண்குமார், படப்பைக்குறிச்சியைச் சேர்ந்த வினோத்பாண்டியன் ஆகிய 3 பேரை  தச்சநல்லூர் போலீசார் கைது செய்தனர். இதேபோல் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், கணேசன் ஆகியோரை பாளை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>