திருவேங்கடம் அருகே பஸ்சில் பெண்களிடம் பணம் அபேஸ்

திருவேங்கடம் மார்ச் 4: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி(40), இவரது உறவினர் ராமலட்சுமி(35). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கோவில்பட்டியிலிருந்து ராஜபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு  அரசு பஸ்சில் சென்றனர். அப்போது பஸ் கலிங்கப்பட்டி அருகே சென்ற போது மகேஸ்வரி தான் வைத்திருந்த பேக்கை பார்த்த போது யாரோ மர்ம நபர் பிளேடால் கிழித்து அதில் இருந்த ரூ.3700ஐ திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து உறவினர் ராமலட்சுமியிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர் தன்னுடைய பேக்கில் வைத்திருந்த ரூ.2500ஐயும் பிளேடால் கிழித்து திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர்கள் பஸ் கண்டக்டரிடம் கூறியுள்ளனர். உடனே பஸ் பயணிகளுடன் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மகேஸ்வரி, ராமலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  பட்டப்பகலில் ஓடும் பஸ்சில் பெண்களிடம் பேக்கை பிளேடால் கிழித்து ரூ.6,200 திருடப்பட்டசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>