சுரண்டை அருகே விபத்தில் காயமுற்ற முதியவர் சாவு

சுரண்டை, மார்ச் 4:  சுரண்டை அருகே வேன் விபத்தில் காயமுற்ற முதியவர் திடீரென இறந்தார். ஊத்துமலை அருகே அண்ணாமலைபுதூரைச் சேர்ந்தவர் சம்முத்தான் (70). கடந்த மாதம் 18ம் தேதி தென்காசி மாவட்டத்தில் நடந்த முதல்வர் பங்கேற்ற பிரசார கூட்டத்திற்கு ஊர்க்காரர்களுடன் வேனில் பயணித்தார். சுரண்டை அருகே பரங்குன்றாபுரம் விலக்கு பகுதி அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை தாறுமாறாக ஓடிய வேன் விபத்துக்கு உள்ளனது. இதில் வேனில் பயணித்தோரில் சம்முத்தான் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் நேற்று முன்தினம் (2ம்தேதி) மாலை டிஸ்சார்ஜ் செய்து வீடு திரும்பிய சம்முத்தான், நேற்று (3ம் தேதி) அதிகாலை 2 மணிக்கு திடீரென இறந்தார். இதுகுறித்து சுரண்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>