வள்ளியூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் ராதாபுரம் தொகுதி சமக வேட்பாளராக லாரன்ஸ் அறிவிப்பு

பணகுடி, மார்ச் 4: ராதாபுரம் தொகுதிக்கு சமக வேட்பாளராக வள்ளியூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் லாரன்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம்தேதி சட்டமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதையடுத்து அனைத்து கட்சிகளும் நேர்காணல் நடத்தி வேட்பாளர்களை அறிவிக்கும் முனைப்பில் உள்ளது. தூத்துகுடியில் நேற்று நடந்த தேர்தல் மாநாட்டில் கட்சியின் தலைவர் சரத்குமார், ராதாபுரம் தொகுதிக்கு வேட்பாளராக வள்ளியூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் லாரன்சை அறிவித்தார்.2008 முதல் கட்சி பணியாற்றி வரும் இவர், அக்கட்சியின் அரசியல் ஆலோசகராக இருந்து வருகிறார். கடந்த 2011ல் வள்ளியூர் பேரூராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவர் ஆனார்.சொந்தமாக லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு ெஹலன் என்ற மனைவியும், ஒலிவா என்ற மகளும் உள்ளனர்.

Related Stories:

>