புதூர் அருகே பால் வாகனத்தில் கடத்தப்பட்ட 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

விளாத்திகுளம், மார்ச் 4: புதூர் அருகே தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் பால் வாகனத்தில் கடத்தி செல்லப்பட்ட 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். புதூர் அருகே சென்னமரெட்டிபட்டி சோதனைச்சாவடியில் வேளாண்மை துணை இயக்குநர் கீதா தலைமையில் சிறப்பு எஸ்ஐ ஜெயக்குமார் உள்ளிட்ட தேர்தல் பறக்கும்படை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பால் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 60 மூடைகளில் 3 டன் ரேஷன் அரிசி சட்டவிரோதமாக கடத்திச்செல்லப்படுவது தெரியவந்தது.  விசாரணையில், வாகனத்தை ஓட்டி வந்தவர் விருதுநகர் மாவட்டம் பரளச்சியை சேர்ந்த திருப்பதி மகன் அரிகிருஷ்ணன்(28) என்பதும், கோழி பண்ணைக்கு ரேஷன் அரிசியை கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள், அரிகிருஷ்ணனை கைது செய்து, தூத்துக்குடி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: