சாத்தான்குளம் பகுதியில் சுவர் விளம்பரங்கள் அழிப்பு பணி தீவிரம்

சாத்தான்குளம், மார்ச் 4: தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து சாத்தான்குளம் பகுதியில் வருவாய்த்துறையினர் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகளை அகற்றும் பணியில்  ஈடுபட்டுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதையொட்டி அரசியல் கட்சியினர் கூட்டணியை  உறுதி செய்து வேட்பாளர்கள் அறிவிக்கும் முனைப்பில் உள்ளனர். இதற்கிடையே தேர்தல் ஆணையம் அனைத்து பகுதியிலும் அரசு மற்றும் தனியார் இடங்களில் வரையப்பட்ட சுவர் விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகளை அப்புறப்படுத்திட உத்தரவிட்டுள்ளது. அதன்படி சாத்தான்குளம் பகுதியில் உள்ள அரசியல் கட்சியினருக்கு அவர்களது விளம்பரங்களை அழிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பேருந்து நிலையம், பேருந்து நிறுத்தம், சாலையோரங்களில் பாலம்  உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான இடத்தில் விளம்பரபடுத்தப்பட்ட சுவரொட்டி, சுவர் விளம்பங்களை கண்டறிந்து வருவாய்துறை  உள்ளாட்சித்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

Related Stories: