சென்னை: செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாமூல் கேட்டதால் தவெக ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் பதவி பறிப்பு; விஜயகுமாருக்கு மீண்டும் பதவி வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தவெகவினர் முற்றுகையிட்டனர். முற்றுகை போராட்டத்திற்கு வந்த பெண்கள், தாங்கள் எதற்காக வந்தோம் என்றே தெரியாமல் நின்றதால் சலசலப்பு ஏற்பட்டது. பதவி கேட்டு தவெக அலுவலகம் செல்லாமல் வேலூர் ஆட்சியரகம் முற்றுகையால் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர். பதவி கேட்டு போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வெளியே அனுப்பினர்
