×

கார் மோதி மூதாட்டி சாவு

பாலக்காடு, மே 28: திருச்சூர் மாவட்டம் மாயணூர் அடுத்த கொண்டாழி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமிகுட்டி (69). இவரது கணவர் புருஷோத்தமன். கடந்த சில ஆண்டுகள் முன் இறந்துவிட்டார். லட்சுமிகுட்டி தனது மகள்களான பத்மஜா, புஷ்பஜா ஆகியோர் வீட்டில் வசித்து வந்தார். பத்மஜா புதிய வீடு கட்டி வருகிறார். அந்த வீடு கட்டும் பணியை பார்த்துவிட்டு லட்சுமிகுட்டி தனது மகள்கள், பேரக்குழந்தைகளுடன் அந்த பகுதியில் உள்ள சாலையை கடந்து சென்றார்.

அப்போது திருச்சூரிலிருந்து ஒத்தப்பாலம் நோக்கி வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் லட்சுமிகுட்டி பலத்த காயமடைந்தார், மகள்களும், பேரக்குழந்தைகளும் சிறிய காயமடைந்தனர். லட்சுமிகுட்டியை அங்கிருந்தோர் மீட்டு கண்ணியம்புரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி லட்சுமிக்குட்டி உயிரிழந்தார்.

 

Tags : Palakkad ,Lakshmi Kutty ,Kondazhi ,Mayanur ,Thrissur district ,Purushothaman ,Padmaja ,Pushpaja ,Padmaja… ,
× RELATED குப்பைக்கழிவுகளால் நோய் பரவும் அபாயம்