×

ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ. 4.18 லட்சம் பறிமுதல்

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படையினர் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விஜயவாடாவில் இருந்து வந்த பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலில் சந்தேகத்துக்கிடமாக வந்த வாலிபரை மடக்கி விசாரித்ததில், முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து, அவரது பையை போலீசார் சோதனை செய்தனர். அதில், கட்டுக்கட்டாக ரூ.4 லட்சத்து 18 ஆயிரத்து 500 ரொக்கம் இருந்தது. அவர் கொண்டு வந்த பணத்துக்கு உரிய ஆவணமும் இல்லை. போலீசார் அவரிடம் விசாரித்தபோது ஆந்திர மாநிலம் கூடூர் பகுதியை சேர்ந்த கிஷோர்(30) என்பதும், தொழில் சம்பந்தமாக பணத்தை எடுத்து வந்ததாகவும் கூறினார். பணத்துக்கான உரிய ஆவணம் இல்லாததால், தேர்தல் சிறப்பு பிரிவு போலீசார் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ. 4.18 லட்சம் பறிமுதல்