மக்கள் அச்சமின்றி வாக்களிக்க துணை ராணுவம், போலீசார் அணிவகுப்பு

முத்துப்பேட்டை, மார்ச் 4: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவம் போலீசார் அணிவகுப்பு நடைபெற்றது. தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், அவர்களது பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாகவும் தமிழக காவல் துறையினர், துணை ராணுவத்தினர் பல்வேறு இடங்களில் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை முத்துப்பேட்டையில் மாவட்ட காவல்துறை மற்றும் இந்தோ திபெத் பிரிவு துணை ராணுவப்படை இணைந்து கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் முத்துப்பேட்டை டிஎஸ்பி தேன்மொழிவேல், பயிற்சி டிஎஸ்பி பிரபு, ஆயுதப்படை டிஎஸ்பி தாவூத் சலீம், துணை கமாண்டோ விஐயகுமார், இன்ஸ்பெக்டர்கள் செந்தூர்பாண்டியன், சிவதாஸ், ஹேமலதா, பிரவீன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் அணிவகுத்து சென்றனர். முத்துப்பேட்டை செம்படவன்காடு பைபாஸ் சாலையிலிருந்து புறப்பட பேரணி ஆலங்காடு எல்லை துவங்கும் வரை சென்று நிறைவடைந்தது.

Related Stories:

>