வாக்காளர்கள் அச்சம் எதிர்மறை சிந்தனையை தவிர்ப்பதே தற்கொலைகளை தடுப்பதற்கு தீர்வு

மன்னார்குடி, மார்ச் 4: அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் இளம் வயது ஊழியர்கள் அலுவலகங்களில் ஏற்படும் பணிசுமைகள் மற்றும் அதனால் ஏற்படும் உளவியல் ரீதியாக மன அழுத்தங்களை எதிர்கொள்ள முடியாமல் எதிர் மறை சிந் தனைகளால் தூண்டப்பட்டு தன்னம்பிக்கையை இழந்து அதிகளவில் தற்கொலை செய்து கொள்வது நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகில், ஒரு வருடத்தில் சுமார் 8 லட்சம் தற்கொலைகள் நிகழ்கின்றன. ஒவ்வொரு 40 நொடிகளில் நாம் ஒரு உயிரை தற்கொலையினால் இழக் கின்றோம். அந்த உயிர் ஒரு குழந்தையாகவோ, ஆசிரியராகவோ, மனைவி யாகவோ இருக்கலாம். தற்கொலை முயற்சிகளோ அதை விட 25 மடங்கு அதிகமாக இருக்கின்றன என்கிறது ஆய்வு.

இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் இளம் வயது ஊழியர்களுக்கு பனியின்போது ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க தன்னம்பிக்கை மற்றும் மன அழுத்த மேலாண்மை பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, உளவியல் நிபுணர், தன்னம்பிக்கை தேசிய பயிற்சியாளர் சம்பத் கூறுகையில், மன அழுத்தம் என்பது இன்றைய சூழலில் எல்லா தரப்பினராலும் எதிர் கொள்ள கூடிய மற்றும் பேச படக்கூடிய ஒன்றாக உள்ளது. உண்மையில் மன அழுத்தம் தேவையான ஒன்றுதான்.

ஆனால், அது அளவுக்கு மிகாமல் சுய கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளும் போது தான் நமது உடலும், மனமும் சீராக இயங்கும். மன அழுத்தம் குறை வாக இருந்தால் ஒருவரால் சிறப்பாக செயல்பட முடியாது. அளவுக்கு அதிகமானால் நிலை குலைந்து போய் விடுவார். மன அழுத்தம் சீராக இருந்தால் மட்டுமே ஒருவர் தன் பதவியில், தொழிலில், படிப்பில் சிறப்பாக செயல்பட முடியும். மன அழுத்தம் ஏற்பட காரணங்களான எதிர்மறை சிந்தனை, அவநம்பிக்கை, தோற்று விடுவோமா என்கிற பயம், மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினை ப்பார்களோ என்கிற எண்ணம் ஆகியன மன அழுத்தத்திற்கான முக்கிய கார ணங்களாகும். ஒரு மனிதன் தொழிலிலோ, படிப்பிலோ, தன்னுடைய பணி யிலோ வெற்றி முடியாமல் போனால் மனம் தளர்ந்து மன உளைச்சலுக்கு தள்ளப்படுகின்றனர். மனச்சோர்வுடன் தற்கொலை எண்ணம் கொண்டிருப்பவரிடம் அவரின் உண ர்வு களைப் பகிர்ந்து விழிப்புணர் வை ஏற்படுத்தும் போது, அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும். சரியான சிகிச்சை மனச்சோர்வையும், தற்கொலை எண்ணத்தையும் மாற்றும் என சம்பத் கூறினார்.

Related Stories:

>