பேருந்து சேவையும் துவங்கியது உளவியல் நிபுணர் வழிகாட்டல் திருவாரூர் திமுக ஒன்றிய செயலாளர் இல்ல திருமண வரவேற்பு விழா

திருவாரூர், மார்ச் 4: திருவாரூரில் நடைபெற்ற திமுக ஒன்றிய செயலாளர் இல்ல திருமண வரவேற்பு விழாவில் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் மணமக்களை வாழ்த்தினர். திருவாரூர் திமுக ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய குழுக் தலைவருமான புலிவலம் ஏ.தேவா - புலிவலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா தேவா ஆகியோரின் மகள் டாக்டர் பிரியதர்ஷினிக்கும் திருத்துறைப்பூண்டி குருசாமி - நாகவள்ளி ஆகியோரின் மகன் என்ஜினீயர் ஜி. முரளிதரனுக்கும் நடைபெற்ற திருமணத்தை சென்னையில் கடந்த 25ம் தேதி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். இதனை தொடர்ந்து மணமக்கள் வரவேற்பு விழா திருவாரூர் விளமல் பொன் தமிழ் திருமண மண்டபத்தில் கடந்த 28ம் தேதி நடைபெற்றது.

திமுக மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்ற இந்த வரவேற்பு விழாவிற்கு தலைமை செயற்குழு உறுப்பினரும் மாவட்ட ஊராட்சி தலைவருமான தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன், முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான மதிவாணன், முன்னாள் எம்.பி ஏகேஎஸ். விஜயன், முன்னாள் எம்எல்ஏ அசோகன் மற்றும் நாகை எம் பி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுக்குழு உறுப்பினர் தியாபாரி, நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் கலியபெருமாள், பாலச்சந்தர், நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் செந்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் நாகராஜன், வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு நிறுவனத் தலைவர் கனகராஜன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக பொறுப்பாளர்கள், சார்பு அணி பொறுப்பாளர்கள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். விழா ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் தேவா, சித்ரா தேவா மற்றும் குடும்பத்தினர், கட்சியினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories:

>