சட்டமன்ற தேர்தலையொட்டி நீடாமங்கலத்தில் உளவுத்துறை போலீசார் தீவிர கண்காணிப்பு

நீடாமங்கலம், மார்ச் 4: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்ட மன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் அமைதியான முறையில் தேர்தலை நடத்திட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் சுறுசுறுப்பாக தேர்தல் களத்தை எதிர்கொள்ள பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். வரும் தேர்தல் களத்தில் வன்முறை ஏதும் நடந்து விடக்கூடாது என்பதில் உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கோயில் வெண்ணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து வருவாய்த் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து தீவிர வாகன சோதனை நடத்துகின்றனர்.

Related Stories:

>