கட்சி கொடிகள் கட்டி எதிர்ப்பு தேர்தல் விதி மீறினால் கடும் நடவடிக்கை

மன்னார்குடி, மார்ச் 4: மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படை அதிகாரிகள், தேர்தல் கண்காணிப்புக்குழு அதி காரிகள், திருமண மண்டபங்கள், அச்சகங்கள் மற்றும் நகை அடகு கடை உரிமையாளர்கள் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் ஆர்டிஓவும், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான அழகர்சாமி தலைமையில் மன்னார்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தெய்வநாயகி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் இளங்கோவன், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரின் நேர்முக உதவியாளர் மலர்க்கொடி ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான அழகர்சாமி பேசுகையில், தேர்தல் ஆணையம் சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்திடவும், தேர்தல் பிரசாரத்தின்போது சமமான ஆரோக்கியமான போட்டியிடும் சூழலை அனைத்து வேட்பாளர்களிடையே உருவாக்கிட பல்வேறு அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அனைத்து வாகனங்களையும் சோதனை யிட வேண்டும். உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் ரொக்க பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும். அதிகாரிகளின் நடவடிக்கைகள் பாரபட்சமின்றி இருக்க வேண்டும்.

அச்சகங்களின் உரிமையாளர்கள் தங்களது அச்சகங்களில் அடிக்கப்படும் தேர்தல் சம்பந்தமான நோட்டீஸ், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், டிஜிட்டல் பேனர் உள்ளிட்டவற்றை தயார் செய்யும்போது, அச்சிடுபவர் மற்றும் வெளியிடுபவர் பெயர் மற்றும் முகவரி முகப்பு பக்கத்தில் அச்சிட வேண்டும். திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதிகளில் வெளியூர் நபர்கள் கூட்டமாக தங்குவதற்கு அனுமதி வழங்கக் கூடாது. சுப நிகழச்சிகளை தவிர அரசியல் தொடர்புடைய கூட்டங்கள் நடைபெற பதிவு செய்யப்பட்டால் அது குறித்த விவரத்தை தேர்தல் அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். சுப நிகழ்ச்சிகள் என்கிற பெயரில் மக்களை கூட்டி பரிசு பொருட்கள், பணம் உள்ளிட்டவைகளை வழங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஆயுதங்கள், பட்டாசுகளை வைக்க அனுமதிக்கக் கூடாது. தேர்தல் விதிமுறைகளை அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும். இதைமீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான அழகர்சாமி கூறினார்.

Related Stories:

>