சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த அரவக்குறிச்சியில் துணை ராணுவம், போலீசார் கொடி அணிவகுப்பு

அரவக்குறிச்சி, மார்ச்4: தேர்தல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக அரவக்குறிச்சி மற்றும் பள்ளபட்டியில் துணை ராணுவம் மற்றும்போலீஸ் அணிவகுப்பு நடைபெற்றது. கரூர் எஸ் பி துவக்கி வைத்தார். தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணைய உத்தரவுப்படி அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் காவல்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக தேர்தல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக அரவக்குறிச்சி மற்றும் பள்ளபட்டியில் ராணுவம் மாற்றும்போலீஸ் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. கரூர் எஸ் பி மகேஸ்வரன் அரவக்குறிச்சி காவல் நிலையம் எதிரே துவக்கி வைத்து அணிவகுப்பில் கலந்து கொண்டார். அணிவகுப்பு அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் துவங்கி, தராபுரம் ரோடு, பஸ் நிலையம், கடைவீதி, புங்கம்பாடி, கார்னர், தாலுகா ஆபிஸ் வழியாக பள்ளபட்டியில் பழனி ரோடு கந்திப்பு அண்னா நகர், ஜி.ஹெச் கார்ணர், ஷாநகர் வழிபாத திண்டுக்கல் ரோடு மின்வாரிய அலுவலகம் அருகில் முடிவடைந்தது. இந்த அணி வகுப்பில் அரவக்குறிச்சி டிஎஸ்பி ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன், எஸ்ஐ சரவணன் உள்ளிட்ட டிஎஸ்பி, ஏடிஎஸ்பி கள் காவலர்கள் மற்றும் துணை ராணுவத்தினர் கலந்து கொண்டனர்.

Related Stories: