குளித்தலை அருகே பெண் தற்கொலை

குளித்தலை, மார்ச் 4: கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா வளையப்பட்டி கிழக்கு தெரு பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்பவர் தனது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்ததில் கடன் இருப்பதாகவும் இரண்டு வருடத்திற்கு முன்பு வலது காலில் பாம்பு கடித்து பாதிக்கப்பட்டு இருந்து வந்த காரணத்தினால் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் அவர் கடந்த மார்ச் 1ம் தேதி அன்று வீட்டில் இருந்த விஷமருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்த அவரை குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் இறந்துவிட்டதாக கூறினார். இதையடுத்து குளித்தலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>