கரூர் அரசு கல்லூரி நூலகத்திற்கு விளையாட்டு, உடற்பயிற்சி சம்பந்தமான புத்தகங்கள்

கரூர், மார்ச். 4: கரூர் அரசுக் கல்லூரி நூலகத்துக்கு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி சம்பந்தமான புத்தகங்களை முன்னாள் மாணவர் கல்லூரி முதல்வரிடம் வழங்கினார்.கரூர் அரசு கலைக் கல்லு£ரியில் பயிலும் மாணவ மாணவிகள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி சம்பந்தமான தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் ரூ. 10ஆயிரம் மதிப்பிலான 120க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவியிடம், கல்லூரியின் முன்னாள் மாணவரும், உடற்கல்வி ஆசிரியருமான புலியூர் வீரதிருப்பதி புத்தகங்களை வழங்கினார். இந்த நிகழ்வில், தமிழ்த்துறை தலைவரும், நு£லக பொறுப்பாளருமான பேராசிரியர் சுதா, கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ராஜேந்திரன், நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>