அரசு பள்ளி ஆசிரியை தீக்குளித்து தற்கொலை

குளித்தலை, மார்ச். 4: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த சத்தியமங்கலம் மாணிக்க நகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மனைவி லதா மகேஷ்( 32). இவர் பாப்பையம்பாடி அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர்களுக்கு திருமணமாகி 13 வருடம் ஆகிறது. இவர்களது மகன் பிரசன்னா 12 ம் வகுப்பு படித்து வருகிறார் மகள் ஜீவ தாரணி (4). இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆசிரியை லதா மகேஷ் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து ஊற்றிக் கொண்டு தீ வைத்துக்கொண்டு சத்தம் போட்டுள்ளார் அப்போது அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்க்கும் பொழுது உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு உள்ள நிலையில் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று முதல் உதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆசிரியை இறந்தார் இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>