400 பேர் போட்டப்பட்டது க.பரமத்தி ஒன்றிய பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் மக்கள் நடமாட்டமின்றி சாலை வெறிச்சோடியது

க.பரமத்தி, மார்ச்.4: க.பரமத்தி ஒன்றிய பகுதியில் 99-.5 டிகிரி வரை வெயில் கொளுத்துவதால், பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஒன்றிய பகுதியில் ஆண்டுக்கு 9 மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். போதிய மழை இல்லாததால் இந்த பகுதியில் விவசாயம் அழிவின் விளிம்புக்கு செல்லும் நிலை உள்ளது. இந்தாண்டு வட கிழக்கு பருவமழை சரி வர பெய்யாததால், அமராவதி, காவிரி ஆறுகளும், ராஜவாய்க்கால், எல்பிபி வாயக்கால் இதனையே நம்பியுள்ள விவசாய கிணறு போன்ற நீர்நிலைகள் தற்போது வறண்டு காணப்படுகின்றன. சில தினங்களுக்கு முன்பு வரை இரவு நேரங்களில் பனிப் பொலிவு அதிகமாக இருந்தது. தற்போது பனிப்பொழிவு குறைந்து இரவு நேரங்களில் புழுக்கமாக உள்ளது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் நட மாட்டம் சற்று குறைந்து வெறிச் சோடி காணப்படுகிறது.

வெயிலின் தாக்கத்தால் குளிர் பானங்கள், இளநீர், நுங்கு, பத நீர் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஏப்ரல் மாதம் துவங்கும் வெயிலின் தாக்கம் தற் போது முன்னேரே தொடங்கியதால் பொது மக்கள் அவதிப்படுகின்றனர். வெயில் தாக்கத்தினால் சிறு குழந்தைகள் முதல் முதியோர்கள் அவதிப்படுகின்றனர். க.பரமத்தியில் கடந்த சில நாட்களாகவே குறிப்பாக நேற்று காலை 8 மணி முதல் மாலை 6மணி வரை 99டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருந்தது. இதனால், பொது மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். வாகன புகை, காற்று மாசு, புவி வெப்பமடைதல் போன்ற பல்வேறு காரணங்களால் தட்ப வெப்ப நிலை மாறி வருகிறது. எனவே, இயற்கையை பாது காக்கவும் வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க சமூக ஆர்வலர்களும் பொதுமக்கள் முன் வர வேண்டும்.

Related Stories:

>