குளத்தூர் அருகே கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம்

க.பரமத்தி, மார்ச்.4: க.பரமத்தி ஒன்றியம் புன்னம் ஊராட்சிக்குட்பட்ட அய்யனூர், குளத்தூர் அருகே சங்கிலிகருப்பன், பட்டவன், கன்னிமார்சாமி ஆகிய தெய்வங்களை வைத்து முன்னோர்கள் வழிபாடு செய்து வந்துள்ளனர். கபழமையான இக்கோவில் புதியதாக கட்டப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று முன்தினம் காவிரியாற்றில் இருந்து பக்தர்கள் புனிதநீர் எடுத்து முளைப்பாரியுடன் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து மாலை 5அரை மணிக்கு விக்னேஷ்வர பூஜை, யாகசாலையில் முதல் காலயாக பூஜையாக நடைபெற்றது.தொடர்ந்து எந்திர பிரதிஷ்டையும் கோபுர கலசம் ஸ்தாபனமும் நேற்று 3ம்தேதி மங்கள இசையுடன் தொடங்கி காலை நாடி சந்தானம், பூர்ணாகுதி, தீபாராதனை, கடம் புறப்பாடு ஆகிய ஹோமங்கள் நடத்தப்பட்டு கோயில் கோபுர கலசத்திற்கு அர்ச்சகர்கள் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: