வத்திராயிருப்பில் மின்னணு இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு

வத்திராயிருப்பு, மார்ச் 4: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெற உள்ளது. வத்திராயிருப்பு தாலுகாவில் முன்பு 117 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது 29 வாக்குச்சாவடிகள் கூடுதலாக உள்ளது. இதனால் 146 வாக்குச்சாவடிகளாக அதிகரித்துள்ளன. இந்நிலையில் மின்னணு இயந்திரத்தில் ஓட்டு போடுவது எப்படி என வத்திராயிருப்பு வருவாய் துறை அலுவலகத்தில் பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. தாசில்தார் அன்னம்மாள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மாதிரி மின்னணு இயந்திரத்தில் ஓட்டு போட்டனர்.

இதே போல சேதுநாராயணபுரத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாதிரி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொதுமக்கள் ஓட்டு போட்டனர். இந்நிகழ்ச்சியில் தேர்தல் மண்டல துணை வட்டாட்சியர் முனியாண்டி, வத்திராயிருப்பு வருவாய் ஆய்வாளர் மாரிமுத்து, தேர்தல் பிரிவு வருவாய் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள் கிருஷ்ணன், வைரமுத்து மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: