சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து பலி எண்ணிக்கை 24 ஆனது

சாத்தூர், மார்ச் 4: சாத்தூர் அருகே அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் படுகாயமடைந்த பெண் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் கடந்த 12ம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலே 19 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்து நடந்த அன்றே மருத்துவமனையில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் கடந்த 20ம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாத்தூர் அருகே படந்தால் பகுதியை சேர்ந்த வைஜெயந்திமாலா(30) உயிரிழந்தார். அதனை தொடர்ந்து கடந்த 24ம் தேதி சாத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடுகச்சரங்குடியைச் சேர்ந்த பால்ராஜ் மனைவி ஜெயா (50) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதனை தொடர்ந்து மார்க்நாதபுரம் சேர்ந்த காளியப்பன்(32) உயிரிழந்தார். நேற்று மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடுச்சூரங்குடியை சேர்ந்த ராஜம்மாள்(54) உயிரிழந்தார். இதனால் அச்சங்குளம் பட்டாசு ஆலையில் ஏற்பட் வெடிவிபத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 15க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நடுகச்சரங்குடி கிராமத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடதக்கது.

Related Stories:

>