ராஜபாளையம் பகுதியில் தேர்தல் விதிமுறை மீறல் அதிகாரிகள் அலட்சியம்

ராஜபாளையம், மார்ச் 4: ராஜபாளையம் பகுதியில் தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாக ஆளுங்கட்சிக்கு ஆதரவான விளம்பர போர்டுகள் அகற்றப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ராஜபாளையம் நகர்ப்பகுதிகளில் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவான விளம்பர போர்டுகள் அகற்றப்படாமல் உள்ளன. தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு பறக்கும் படை அதிகாரிகள் வாகனச்சோதனையில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

பல்வேறு இடங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் சிலைகள் மூடப்பட்டு கட்சிக்கொடி அகற்றப்பட்டுள்ளது. ஆனால் சில இடங்களில் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் ஆளுங்கட்சி ஆதரவு விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பர போர்டுகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories:

>