அண்ணா விருது பெற்ற டிஎஸ்பிக்கு பாராட்டு

ராஜபாளையம், மார்ச் 4: ராஜபாளையம் டிஎஸ்பி நாகஷங்கருக்கு சிறப்பாக கடமை புரிந்தமைக்கான அண்ணா விருது சென்னையில் வழங்கப்பட்டுள்ளது. தென்மாவட்ட அளவிலும் மாநிலத்தில் எட்டு பேரில் ஒரே டிஎஸ்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றுள்ளார். இதற்காக சென்னையில் ராஜரத்தினம் மைதானத்தில் கடந்த மாதம் 27ம் தேதி நடந்த விழாவில் டிஜிபி சைலேந்திரபாபு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். விருது பெற்றதற்காக மாவட்ட எஸ்.பி பெருமாள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>