வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 22ம் தேதி வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். புகாரின்படி வாலாஜா போலீசார் விசாரணையில், தேவதானம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(19) என்பவர், மாணவியை சென்னைக்கு கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு மணிகண்டனை போலீசார் மடக்கி பிடித்து போக்சோ வழக்குப்பதிந்து, கைது செய்தனர். மாணவியை மீட்டு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
