கொடைக்கானலில் நெரிசலை தவிர்க்க வன சுற்றுலாத் தலங்களுக்கு மே 31 வரை இலவச அனுமதி

 

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மலர் கண்காட்சி, கோடை விழா துவங்கி வரும் மே 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை காண தினசரி சுற்றுலாப்பயணிகள் நகரில் குவிந்து வருகின்றனர். நகரில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல நுழைவு கட்டணம் வனத்துறையால் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பசுமை பள்ளத்தாக்கு அருகே வசூல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கியூஆர் கோடு முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், பல கிலோ மீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சீசன் காலங்களில் நுழைவு கட்டணத்தை ரத்து செய்து வாகனங்கள் தாமதமின்றி செல்ல அனுமதிக்க வேண்டும் என கலெக்டர் சரவணனிடம் சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று நேற்று முதல் வரும் மே 31 வரை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை இலவசமாக பார்வையிடலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: