×

மளிகை கடையில் பதுக்கிய 150 கிலோ குட்கா பறிமுதல்

போச்சம்பள்ளி, மே 25: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (65). வியாபாரியான இவர் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் மளிகை பொருட்களுடன் சேர்த்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு சென்ற போலீசார், அங்கிருந்த முருகேசனின் மளிகை கடையில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் சுமார் ரூ.75 ஆயிரம் மதிப்பிலான 150 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். மளிகை கடையின் உரிமையாளர் முருகேசனை கைது செய்த போலீசார், நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர்.

 

Tags : Pochampally ,Murugesan ,Kauverypatnam ,Krishnagiri district ,Tamil Nadu government ,
× RELATED காய்கறிகள் விலை 2 மடங்கு உயர்வு