மூளைச்சாவு ஏற்பட்டு இறந்த பெண்ணின் கண்கள் தானம்

கெங்கவல்லி, மார்ச் 4:சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே நடுவலூரைச் சேர்ந்தவர் மாரப்பன். இவரது மனைவி சந்திரா(55). இவர்கள், கடந்த மாதம் துக்க வீட்டிற்கு சென்று விட்டு டூவீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, பின்சக்கரத்தில் புடவை சிக்கிக் கொண்டதில் சந்திரா தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, மூளைச்சாவு ஏற்பட்டதையடுத்து, அவரது கண்களை தானமாக வழங்க குடும்பத்தினர் முன் வந்தனர். இதையடுத்து, சந்திராவின் கண்கள் தானமாக பெறப்பட்டது. எதிர்பாராத விபத்தில் சிக்கி சந்திரா உயிரிழந்தது அதிர்ச்சியளிப்பதாக இருந்தாலும், அவரது கண்களால் 2 பேருக்கு பார்வை கிடைப்பது ஆறுதல் அளிக்கிறது என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Related Stories:

>