×

பக்தர்கள் பால்குட ஊர்வலம்

இடைப்பாடி, மார்ச் 4: இடைப்பாடி காளியம்மன் கோயில் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சேலம் மாவட்டம் இடைப்பாடி வெள்ளாண்டிவலசை ஓம் சக்தி காளியம்மன், முனியப்பன் கோயில் விழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் செய்து வந்தனர். மேலும், இரவு நேரங்களில் சுவாமி பல்லக்கு ஊர்வலமும் நடைபெற்று வந்தது. அன்னதானமும் வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், நேற்று காலை பால்குடம் ஊர்வலம் நடந்தது. வெள்ளாண்டிவலசு மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாரை, தப்பட்டை முழங்க பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.

Tags :
× RELATED விஷ தேனீக்கள் அழிப்பு