×

காற்றால் படகு திசை மாறியது ராமேஸ்வரம் மீனவர் இலங்கை சிறையிலடைப்பு

ராமேஸ்வரம்: காற்றால் படகு திசை மாறி சென்றதையடுத்து, ராமேஸ்வரம் மீனவர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டார். ராமேஸ்வரம் புதுரோடு பகுதியைச் சேர்ந்த மீனவர் பாண்டி (60). நாட்டுப்படகில் கடந்த 21ம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். பலத்த காற்றின் காரணமாக கடலில் படகை இயக்க முடியாமல் தத்தளித்துள்ளார். படகு இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று முன்தினம் மாலை கரை ஒதுங்கியது.

அவரை மீட்ட மீனவர்கள், நெடுந்தீவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். நேற்று யாழ்ப்பாணம் மாவட்டம் ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி வீட்டில் மீனவர் பாண்டி ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர் பாண்டியை வரும் ஜூன் 5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர் பாண்டி நேற்று யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Rameswaram ,Pandi ,Puthurodu ,
× RELATED இன்ஸ்பெக்டர் தாக்கியதால் விஷம்...