காலாப்பட்டு: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், வண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (62). ஆடு, மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மரக்காணம் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 5ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமியை அழைத்து அருகில் உள்ள கடையில் வடை வாங்கி வர சொல்லி இருக்கிறார். அவர் வடை வாங்கி வந்ததும் சிறுமிக்கு வடையை கொடுத்து அருகில் அமர வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வீட்டுக்கு வந்த சிறுமி தாயிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில் கோட்டகுப்பம் அனைத்து மகளிர் போலீசார் கன்னியப்பனை கைது செய்தனர். கோவையில் 10 வயது மாணவி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில், 11 வயது சிறுமிக்கு முதியவர் பாலியல் தொந்தரவு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
