×

ஆட்சி தவறு செய்தால் நாங்கள் தட்டிக்கேட்போம்: தமிழக காங்கிரஸ் அமைச்சர் உறுதி

 

நாகர்கோவில்: தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் நேற்று நாகர்கோவில் வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: இந்த அரசு ஒரு மதச்சார்பற்ற அணியாக இருப்பதால் நாங்களும் அவர்களோடு இணைந்து பணியாற்றி வருகிறோம். இந்த அரசில் மக்களுக்குத் தவறு நடந்தால் நாங்கள் தட்டிக் கேட்போம். கூட்டணி ஆட்சி என்பது மக்களுக்கு நல்லது செய்வதற்காகத்தான்.

நல்ல திட்டங்களைக் கொண்டுவர வேண்டும், மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் எங்களது தலைவர் ராகுல் காந்தி இக்கூட்டணியை அமைத்துள்ளார். தவெகவில் எந்தக் குதிரை பேரமும் நடக்கவில்லை. கோவை சம்பவம் மாதிரியான விஷயத்தில் அரசு தனிக்கவனம் செலுத்தி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தும். சட்டத்திற்குப் புறம்பாகத் தவறு நடந்தால் அதைத் தட்டிக் கேட்போம்.
. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Nadu ,Congress ,Minister ,Nagercoil ,MLA ,Rajesh Kumar ,Tourism Minister ,
× RELATED இன்ஸ்பெக்டர் தாக்கியதால் விஷம்...