×

கேரள தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ரத்தன் கேல்கர் முதல்வர் சதீசனின் செயலாளராக நியமனம்: கம்யூனிஸ்ட், பாஜ கடும் எதிர்ப்பு

 

திருவனந்தபுரம்: கேரள தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ரத்தன் யு. கேல்கரை முதல்வர் வி.டி. சதீசனின் செயலாளராக நியமித்ததற்கு கம்யூனிஸ்ட், பாஜ உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கேரள முதல்வர் வி.டி. சதீசனின் செயலாளராக மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ரத்தன் யு. கேல்கர் நியமிக்கப்பட்டார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும் இவர் அலுவலகத்திற்கு வந்து உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார். ரத்தன் யு. கேல்கரின் நியமனத்திற்கு கம்யூனிஸ்ட், பாஜ உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேற்கு வங்கத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த மனோஜ் அகர்வாலை பாஜ அரசு தலைமைச் செயலாளராக நியமித்த போது எதிர்ப்பு தெரிவித்த ராகுல்காந்தி, கேரளாவிலும் அதேபோல ஒரு நியமனம் நடந்ததற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்று கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கோவிந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதில் மர்மம் இருக்கிறது என்றும், விரைவில் அது வெளிச்சத்திற்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு பாஜ எம்எல்ஏவும், முன்னாள் ஒன்றிய இணையமைச்சருமான வி. முரளீதரனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளரும், எம்பியுமான கே.சி. வேணுகோபாலிடம் கேட்டபோது, இது மாநில அரசின் விவகாரம். அதில் என்னால் கருத்து எதுவும் சொல்ல முடியாது என்றார்.

Tags : Kerala ,Chief Electoral Officer ,Ratan Kelkar ,Chief Minister ,Satheesan ,Communist ,BJP ,Thiruvananthapuram ,Ratan U. Kelkar ,V.D. Satheesan ,Secretary State Chief Election… ,
× RELATED தெருநாய்களை அப்புறப்படுத்தும்...