மது கடத்தலை தடுக்க அலுவலர்கள் நியமனம்

நாமக்கல்,  மார்ச் 4: நாமக்கல் மாவட்டத்தில் மதுபான கடத்தல் புகார்களை விசாரிக்க,  துணை கலெக்டர் உள்பட 3 சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களின் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து  நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில்  மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் கடத்துதல், விற்பனை செய்தல், டாஸ்மாக்  கடைகளில் அளவுக்கு அதிகமாக மதுபானம் விற்பனை செய்வது, சட்ட  விரோதமாக மதுபானங்கள் விற்பனை மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து  மதுபானங்கள் எல்லைப்பகுதிகளில் கடத்தப்படுதல் குறித்து  கண்காணிக்கப்படுகிறது. இதுதொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க,  சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கட்டுப்பாட்டு அறைக்கு  வரும் புகார்களையும் இந்த அலுவலர்கள் கண்காணிப்பார்கள். அதன்படி, நடேசன்-  துணை கலெக்டர், சிறப்பு பறக்கும்படை சேலம் 9445029760,  சாகுல் ஹமீது- தாசில்தார் 9488352880 மற்றும் குப்புராஜ்-உதவி மேலாளர்  9865340094 ஆகியோரை செல்போனில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

Related Stories: