சென்னையில் பிறந்து 9 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தல்: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்த கீதா(29) என்பவரின் 9 நாள் குழந்தையை அடையாளம் தெரியாத பெண் கடத்திச் சென்றார். மகப்பேறுக்காக ராயபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கீதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் உதவுவது போல அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பழகியுள்ளார். இன்று டிஸ்சார்ஜ் ஆன கீதா ஆட்டோவில் வீட்டுக்கு செல்ல காத்திருந்தபோது குழந்தையுடன் அந்த பெண் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: