அமமுக நகர செயலாளர் திமுகவில் சேர்ந்தார்

திருச்செங்கோடு, மார்ச் 4: திருச்செங்கோடு நகர அமமுக நகர செயலாளராக இருந்தவர் மாதேஸ்வரன். இவர் அக்கட்சியில் இருந்து விலகி, நேற்று நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ். மூர்த்தி எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், நகர பொறுப்பாளர் தாண்டவன் கார்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜிஜேந்திரன், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜபாண்டி ராஜவேலு, அணிமூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமரைச்செல்வன், தொழிற்சங்க தலைவர் சுந்தரமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

>