ரிக் உரிமையாளர்கள் சங்க சம்மேளன அவசர கூட்டம்

திருச்செங்கோடு, மார்ச் 4: தமிழ்நாடு ரிக் உரிமையாளர்கள் சங்கங்களின் சம்மேளன அவசர ஆலோசனை கூட்டம், திருச்செங்கோட்டில் சம்மேளன தலைவர் சீனிவாசா கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது. பொருளாளர் சுந்தரராஜன் வரவேற்றார். செயலாளர் கொங்கு சேகர், துணைத்தலைவர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர். தென்மண்டல வேளாண்மை ரிக் உரிமையாளர் சங்க தலைவர் பாரி கணேசன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில், மத்திய அரசு டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். ரிக் தொழிலுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவதுடன், டீசல் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை, மத்திய அரசே ஏற்க வேணடும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் லாரி சங்க செயலாளர் எவரெஸ்ட் ரவி, பரமத்திவேலூர் ேவலுசாமி, ஈரோடு கிருஷ்ணமூர்த்தி, சென்னை சிட்டி ராமய்யா, வடசென்னை மாரிமுத்து, சேலம் சேதுராம கிருஷ்ணன், தஞ்சை வெங்கடேசன், திண்டுக்கல் ஜெயராமன், மதுரை சுரேஷ், விருதுநகர் சண்முகம் உள்ளிட்ட 28 மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: