காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா

குமாரபாளையம், மார்ச் 4: குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோயில் திருவிழா கடந்த மாதம் 16ம்தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா நேற்று அதிகாலை நடைபெற்றது. கோயில் முன்பு குண்டம் தயார் செய்யப்பட்டு, பூசாரி சதாசிவம் காவிரி ஆற்றில் இருந்து கரகம் எடுத்து ஊர்வலமாக வந்து குண்டம் இறங்கினார். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து, சுவாமிக்கு படைத்து வழிபட்டனர். தொடர்ந்து தேர்த்திருவிழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Related Stories:

>