×

விமானநிலைய அலுவலக அறையில் பாதுகாவலர் தூக்கிட்டு தற்கொலை

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் கடந்த 7 ஆண்டுகளாக திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான காந்தி கன்னியப்பன் (57) பாதுகாவலராக வேலைபார்த்து வந்துள்ளார்.

சென்னை விமானநிலையத்தின் 2வது தளத்தில் உள்ள நிர்வாக பிரிவு அலுவலகத்தில் நேற்றிரவு காந்தி கன்னியப்பன் இரவு பணியில் இருந்துள்ளார். அவருக்கு மாற்றாக, இன்று காலை மற்றொரு பாதுகாவலர் பணிக்கு வந்துள்ளார். அப்போது அலுவலக அறையில் மின்விசிறி கொக்கியில் காந்தி கன்னியப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் தொங்கி கொண்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சென்னை விமானநிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணியில் இருந்த பாதுகாவலரின் தற்கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். சென்னை விமானநிலைய பகுதிகளில் யுபிஎன்எல் எனும தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் காந்தி கன்னியப்பன்பாதுகாவலராக பணிபுரிந்து வந்துள்ளார் என குறிப்பிடத்தக்கது.

Tags : Gandhi Kanniappan ,Tiruvannamalai district ,Saiyaru ,Chennai Airport ,Gandhi ,
× RELATED போலீசார் தாக்கியதில் மன உளைச்சலில்...