ஓடையை ஆக்கிரமித்து கட்டிய கொட்டகை அகற்றம்

குமாரபாளையம், மார்ச்  4: குமாரபாளையத்தில் ஓடையை ஆக்கிரமித்து அமைத்த கொட்டகையை, வருவாய்த்துறையினர் நேற்று அப்புறப்படுத்தினர். குமாரபாளையம் நகராட்சி  கத்தேரி பிரிவு சாலையில் ஓடையை ஆக்கிரமித்து தனிநபர் ஒருவர் கொட்டகை  அமைத்தார். இதனால் நீர்வழித்தடம் மறைந்து மழைக்காலங்களில் வெள்ளம்  வெளியேறாமல் வீடுகளுக்கு தேங்கும் அபாயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி  மக்கள், கொட்டகை அமைத்தவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதை  கண்டுகொள்ளாமல் கொட்டகை போடுவதில் தீவிரம் காட்டினார். இதுகுறித்து  குமாரபாளையம் தாசில்தாரிடம், மக்கள் நீதி மய்ய மாவட்ட செயலாளர் காமராஜ்,  நகர செயலாளர் சவரணன் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் புகார் செய்தனர். இதையடுத்து விஏஓ செந்தில்குமார், சம்பவ இடத்துக்கு  உடனடியாக சென்று, ஆக்கிரமிப்பு இடத்தை அளவீடு செய்தார். அது ஓடை  புறம்போக்கு நிலம் என்பது உறுதி செய்யப்பட்டதால், அங்கிருந்த  கொட்டகையை ஆட்களை கொண்டு அப்புறப்படுத்தினார்.  நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நபரை விஏஓ  எச்சரித்து சென்றார்.

Related Stories: