வியாபாரியிடம் ₹1.90 லட்சம்

பறிமுதல்ஓசூர், மார்ச்.4:கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்ட் பகுதியைச் சேர்ந்தவர் மாருதிபிரசாத்(28). அட்டை தயாரிக்கும் வியாபாரி. இவர் வியாபார நிமித்தமாக பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு நேற்று, தனது காரில் வந்து கொண்டிருந்தார். ஓசூர் தொரப்பள்ளி அருகே வந்து கொண்டிருந்த போது, தேர்தல் பறக்கும் படை அதிகாரி நாகராஜ் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மாருதி பிரசாத் காரை சோதனை செய்த போது, உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ₹1.90 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் கொண்டு வந்து காண்பித்து விட்டு, பணத்தை பெற்றுச்செல்லுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்த பணத்தை ஓசூர் ஆர்டிஓ குணசேகரிடம், தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

Related Stories:

>