மிட்டஅள்ளியில் தென்னை டானிக் விளக்க பயிற்சி

காவேரிப்பட்டணம், மார்ச் 4: திருச்சி தோட்டக்கலைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்திற்கு ஊரக தோட்டக்கலை பணி அனுபவத்திட்டத்தின் கீழ் வந்துள்ள 4ம் ஆண்டு மாணவிகள் (சௌமியா, நிஷாந்தி, அகல்யா, பூர்னிகா, தீபிகா) பேராசிரியை ஜீவ ஜோதி வழிகாட்டுதலின் கீழ், மிட்டஅள்ளி கிராமத்தில் விவசாயிகளுக்கு தென்னை டானிக் பயன்பாடுகள் குறித்த செயல்முறை விளக்கம் அளித்தனர். TNAU தென்னை டானிக் ஒரு வளர்ச்சி ஊக்கி ஆகும். இதனை ஒரு மரத்திற்கு 200 மிலி அளவில் எடுத்துக்கொண்டு, மரத்திலிருந்து 3அடி இடைவெளியில், 1 அடி ஆழத்தில் காணப்படும் பென்சில் தடிமன் உள்ள இளம்சிவப்பு நிற வேரில் டானிக் பாக்கெட்டை கட்ட வேண்டும். இதனால் தென்னையில் பிரச்னைகளான, தரிசு கொட்டை, போரான் குறைபாடு, எரியோபைட் சிலந்தி போன்றவற்றை கட்டுப்படுத்தி, சிறந்த மேலாண்மை மேற்கொள்ளலாம். மேலும், தென்னை குலை வைப்பு சதவீதமும் அதிகரிக்கும். இவ்வாறு விவசாயிகளுக்கு விளக்கி கூறினர்.

Related Stories:

>