சட்ட விரோத மது விற்பனையை தடுக்க சிறப்பு பறக்கும் படை அமைப்பு

கிருஷ்ணகிரி, மார்ச் 4: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. அதன்படி, சட்ட விரோதமாக மது விற்பனை செய்தல் மற்றும் கடத்தலை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், டாஸ்மாக் கடைகளில் தினசரி விற்பனையை கண்காணிக்கவும், இது தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மாவட்ட அளவிலான சிறப்பு பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பறக்கும் படையில் கிருஷ்ணகிரி டாஸ்மாக் கிடங்கு மேலாளர் வெங்கடேசன் (செல் 9443910022) தலைமையில் காளியப்பன் (9443967059), நாச்சி (8248222098), சரவணன் (9994146585), சிவன்(9080745634), சத்தியநாராயணன் (9487046979) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் மாவட்டம் முழுவதும் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவர். எனவே, பொதுமக்கள் மதுபான கடத்துல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற புகார்களை, மேற்கண்ட செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>