கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

தர்மபுரி, மார்ச் 4: பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடந்தது.பென்னாகரம் அருகே மாமரத்துபள்ளம் பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வணிகவியல் துறையின் சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி நேற்று முன்தினம் நடந்தது. கல்லூரி முதல்வர் செல்வவிநாயகம் தலைமை வகித்தார். பயிற்சியில் வேலைவாய்ப்பு கலந்தாய்வில் மேற்கொள்ளும் அணுகுமுறைகள், தொழில்முனைவோர்களிடம் அணுகுமுறை, வேலைவாய்ப்புகளை தேர்ந்தெடுக்கும் முறை பற்றி விளக்கமாக தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் வணிகவியல் துறை பேராசிரியர்கள் கண்ணுச்சாமி, வெங்கடாசலம், தமிழ்த் துறை பேராசிரியர் இளவரசன், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>