நத்தத்தில் தேர்தல் விதிமுறை விளக்க கூட்டம்

நத்தம், மார்ச் 3: நத்தம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் விதிமுறைகள் குறித்த விளக்க கூட்டம் நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் திருமலை தலைமை வகித்தார். இதில் வங்கி அதிகாரிகள், தங்க நகை அடகுபிடிக்கும் கடை உரிமையாளர்கள், அரசியல் கட்சியினர் என பலருக்கும் தனித்தனியாக விளக்க கூட்டம் நடந்தது. முதலாவதாக வங்கி அதிகாரிகள் அதிகப்படியான தொகைகளை வரவு, செலவுகளுக்கு பயன்படுத்துவது குறித்து தெரிவிக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டது. தொடர்ந்து அடகு கடைகளில் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை ஒரு நபர் பல்வேறு நபர்களின் ரசீதை கொண்டு திருப்ப வந்தால் உரிமையாளர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்காதபட்சத்தில் நகை திருப்பியவர், கடைக்காரர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் கட்சியினருக்கு சுவர் விளம்பரம், கட்சி கொடிகள் பயன்படுத்துதல், தேர்தல் பிரசாரத்தின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கினர். இதில் அதிமுக நகர ஜெ பேரவை செயலாளர் சேக் தாவூது, திமுக நகர செயலாளர் முத்துக்குமாரசாமி, கம்யூனிஸ்ட் கட்சி விஜயவீரன் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி விஜயலட்சுமி நன்றி கூறினார்.

Related Stories:

>