பெட்ரோல், டீசலுக்கு பற்றாக்குறை இல்லை: ஐஓசி தகவல்

 

புதுடெல்லி: ஐஓசி நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை: நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு ஒட்டுமொத்த பற்றாக்குறை எதுவும் இல்லை. பெரும்பாலான பம்புகளில் இருப்புகளும் விநியோகமும் இயல்பாக நடக்கிறது. தற்போதைய அறுவடைக் காலத்தில் டீசல் தேவையில் ஏற்படும் பருவகால அதிகரிப்பு, சில தனியார் பங்க்குகளில் அதிக சில்லறை விலை காரணமாக வாடிக்கையாளர்கள் தற்காலிகமாக இடம்பெயர்தல் போன்ற காரணங்களால் குறிப்பிட்ட சில சில்லறை விற்பனை நிலையங்களில் மட்டுமே விநியோக தடைகள் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: