×

இத்தகைய அமைப்பு நல்லதா? அரசியல் தலைவர்களாக உருவாக குறைந்தபட்ச தகுதி எதுவுமில்லை: ஆளுநர் அர்லேகர் பேச்சு

 

பனாஜி: கோவாவின் பனாஜியில் நடந்த தேசிய இளைஞர் நாடாளுமன்றம் நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளம் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பேசியதாவது: காரை ஓட்டுவதற்கு கூட அடிப்படை தகுதிகள், பயிற்சி மற்றும் உரிமம் தேவைப்படுகிறது. சட்டம், மருத்துவம், ஆசிரியர் போன்ற தொழில்களுக்கும், ஆரம்ப நிலை அரசு பணிகளுக்கும் கூட குறைந்தபட்ச கல்வித் தகுதிகள் தேவைப்படுகின்றன. ஒரு அலுவலகத்தில் பியூன் கூட 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதிகாரிகள், பட்டதாரிகளாகவோ, முதுகலை பட்டதாரிகளாகவோ இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், அரசியலில் அப்படிப்பட்ட தேவைகள் எதுவும் இல்லை. அடிப்படை கல்வித் தகுதி இல்லாமலேயே ஒருவர் அமைச்சராகக் கூட ஆக முடியும். ஐஏஎஸ், ஐபிஎஸ்களுக்கே பயிற்சிகள் உள்ளன. ஆனால் அரசியல் தலைவர் ஆவதற்கு என்ன பயிற்சி இருக்கிறது? ஒரு அரசியல் தலைவரை உருவாக்குவதற்கு நம்மிடம் எந்த முறையான கட்டமைப்பும் இல்லை. இத்தகைய அமைப்பு நல்லதா என இளைஞர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.
அரசியலுக்குள் அறிவார்ந்த தலைமைத்துவத்தை கொண்டு வர தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Governor ,Arlekar ,Panaji ,National Youth Parliament ,Panaji, Goa, ,Tamil Nadu ,Kerala ,Rajendra Arlekar ,
× RELATED தேர்தல் பணத்தில் ‘கை’ வைத்த...