திண்டுக்கல் கலெக்டர் ஆபீஸ் முன்பு விருப்பாச்சி கோபால் நாயக்கருக்கு சிலை நிறுவ கோரி மனு

திண்டுக்கல், மார்ச் 3: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நாயுடு நாயக்கர் உறவின்முறை இன மக்களின் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 5க்கும் மேற்பட்டோர் வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த மனு பெட்டியில் மனு அளித்தனர். அதில், ‘கல்வி வேலைவாய்ப்பில் நாயுடு நாயக்கர் இன அனைத்து தரப்பு மக்களுக்கும் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு விருப்பாச்சி கோபால் நாயக்கர் உருவ சிலையை நிறுவ வேண்டும். திண்டுக்கல்லில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு தமிழக அரசு விருப்பாச்சி கோபால் நாயக்கர் அரசு மருத்துவக்கல்லூரி என பெயர் சூட்ட வேண்டும். திண்டுக்கல்லில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் மாவீரர் விருப்பாச்சி கோபால் நாயக்கர் புகைப்படமானது இடம்பெற செய்ய வேண்டும் கோபால சமுத்திர கரையில் விருப்பாச்சி கோபால நாயக்கருக்கு நினைவு மண்டபமும், மலைக்கோட்டை கட்டிய முதலாம் முத்து கிருஷ்ணப்ப நாயக்கருக்கு மண்டபத்துடன் முழு உருவ வெண்கல சிலை நிறுவ வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும்’ என தெரிவித்திருந்தனர்.

Related Stories: