ஓய்வு காவலர்கள் சந்திப்பில் நெகழ்ச்சி

திண்டுக்கல், மார்ச் 3: திண்டுக்கல்லில் உள்ள தனியார் மகாலில் 1984ம் ஆண்டு வீராபுரம், ஆவடியில் பயிற்சி முடித்து தற்போது தமிழக காவல்துறையில் பணிபுரியும்,  ஓய்வுபெற்ற காவலர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கடந்த 36 வருடங்களுக்கு பின் சந்தித்த அவர்கள், காவல்துறையில் பணிபுரியும் போது நடந்த நிகழ்வுகளை ஞாபகப்படுத்தியும், குடும்ப நினைவுகளை மகிழ்ச்சியுடனும் பேசி மகிழ்ந்தனர். தொடர்ந்து அனைவரும் ஒன்றாக உணவருந்திய பின், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர். வாட்ஸ்அப் ஒருங்கிணைப்பு பணியை ஓய்வுபெற்ற சிறப்பு எஸ்ஐ சுப்பிரமணியபுரம் செய்திருந்தார்.

Related Stories:

>